உள்நாட்டு செய்திகள்

சதுர சேனாரத்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை



டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் அலுவலகத்திற்குள் நுழைந்து தகவல் பெற்றுக் கொள்ள முயற்சித்த அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவையில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சதுர சேனாரத்னவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் செயற்பாடுகள் தொடர்பில் இதுவரையில் விசாரணை மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஹரின் பெர்ணான்டோவினால் எவன்கார்ட் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்களை அடிப்படையாக கொண்டு சதுர சேனாநாயக்க அவரது அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 

Related posts

பந்து நெஞ்சில் பாய்ந்ததில் சந்திமாளுக்கு இன்று பரிசோதனை..

wpengine

சகல சமூகங்களுக்கும் அரசியல் அந்தஸ்து

wpengine

வெலிகம துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர்களை கைது செய்ய வேண்டாம்

Azeem Kilabdeen