உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சதுரவின் கருத்து அரசின் நிலைப்பாடல்ல – விஜயதாச சாடல்



பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்னவின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மருத்துவர்களை இழிவான வார்த்தைகளில் திட்டித் தீர்ப்பது முறையல்ல என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், சுகாதார அமைச்சரின் புதல்வருமான சதுர சேனாநாயக்க, மருத்துவர்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்து அரசாங்கத்தின் கருத்து கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியில் நாட்டின் சுகாதார சேவையை மிகச் சிறந்த முறையில் மருத்துவர்களும், மருத்துவ அதிகாரிகள் சங்கமும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுகாதாரத்துறையை ஆசியாவிலேயே சிறந்த நிலைமைக்கு கொண்டு வர சங்கத்தின் பங்களிப்பு அளப்பரியது என அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்களை குற்றம் சுமத்தவோ அல்லது இழிவாகவே பேசவோ பாராளுமன்ற உறுப்பினர் சதுரவிற்கு உரிமையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும், நல்லாட்சியை உருவாக்க மருத்துவர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகள் அர்ப்பணிப்புக்களை செய்துள்ளனர் எனவும் இந்த நிலையில் சதுர சேனாரட்னவின் கருத்து அரசாங்கத்தின் கருத்தாக அமையாது என நீதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மாத்தறை, கிரிந்த வன்முறை – 04 பொலிசார் பணி இடைநிறுத்தம்

wpengine

“நீதியை அடைவதில் உதவிய IPU அமைப்பிற்கு நன்றி” – ரிஷாத்

wpengine

மதுபோதையில் வாகனம் செலுத்திய 110 சாரதிகள் கைது

wpengine