உள்நாட்டு செய்திகள்

சதித் திட்டம் சம்பவம் தொடர்பில் தன்னிடமும் சில தகவல்கள் இருப்பதாக பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு..


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ​கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவரையும், கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், வாக்குமூலமளிக்க எந்த நேரத்திலும் தான் தயாராகவிருப்பதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபர் என்ற ரீதியில் குறித்த இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலமளிப்பது தனது கடமையென்று தெரிவித்துள்ள பொலிஸ்மா அதிபர் இரகசியப் பொலிஸாருக்கு முன்பாக தன்னிடம் வாக்குமூலம் பெறவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் முன்வைப்பதற்கு தன்னிடமும் சில தகவல்கள் இருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முன்னணி வர்த்தகரான ஜேம்ஸ் பெக்கர் இராஜினாமா

wpengine

சட்டமா அதிபரிடமிருந்து 130 பக்க அறிக்கை

wpengine

இந்திய பிரதமர் இன்று அநுராதபுரத்திற்கு விஜயம்

Azeem Kilabdeen