உள்நாட்டு செய்திகள்

போலி நாணயத்தாள்களுடன் 3 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டவிரோத நாணயத்தாள்களுடன் 03 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முல்லேரியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 100 கோடி ரூபா பெறுமதியான 5,000 ரூபா நாணயத்தாள்கள் அடங்கிய 125 பணக்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

இதன்போது சந்தேக நபர்களின் காரொன்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் முல்லேரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

2012 ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு…

wpengine

முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்னவின் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு…

wpengine

இங்கிலாந்தில் வீழ்ந்த அமெரிக்க போர் விமானம்

wpengine