உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோதமாக தங்கம் கடத்த முற்பட்ட நால்வர் கைது



இந்தியாவிற்கு சட்டவிரோதமாக ஒரு தொகை தங்கத்தை கடத்திச் செல்ல முற்பட்ட நான்கு நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

20, 23, 24 மற்றும் 38 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியர் ஒருவரும் மூன்று இலங்கையர்களுமே இன்று (21) அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

387.81 கிராம் நிறையுடைய தங்கம் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றின் பெறுமதி 2,132,955 ருபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களில் ஒருவருக்கு 10,000 ரூபா படி அபராதம் விதிக்கப்பட்டதாக சுங்கப் பிரிவு கூறியுள்ளது.

 

Related posts

சாலாவ இராணுவ முகாமுக்கு அருகாமையில் தீப்பரவல்…

wpengine

FCID முறையாகவே நிறுவப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவிப்பு..

wpengine

வெலிக்கடைச் சிறைச்சாலை காணி விற்பனைக்கு – அஜித் பெரேரா

wpengine