உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை அமைச்சராக சாகல ரத்நாயக்க



ஏலவே தென்பகுதி அபிவிருத்தி அமைச்சராக பதவி வகிக்கும் சாகல ரத்னாயக்க இன்று புதிய அமைச்சுப் பொறுப்புக்கான சத்தியப் பிரமாணத்தை செய்து கொள்ளவுள்ளார்.

அவன்காட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் விடயம் தொடர்பில் சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சராக இருந்த திலக் மாரப்பன தனது பதவியினை இராஜினாமாச் செய்ததை அடுத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரின் குறித்த பதவிக்கான வெற்றிடத்திற்கே சாகல ரட்நாயக்க இன்று சத்திய பிரமாணம் செய்துக்கொள்கிறார்.

மேலும், அவர் சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.

எனினும் மாரப்பனவிடம் இருந்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மேலதிக அமைச்சராக அமைச்சர் டி எம் சுவாமிநாதனிடம் கையளிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

நாரஹேன்பிட்டி – தாபரே மாவத்தை பகுதி முடக்கம்

wpengine

துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் ஒருவர் பலி..

wpengine

கைதுகள் தொடர்ந்தாலும் எதிர்ப்புப் போராட்டங்களில் மாற்றம் இல்லை – லஹிரு…

wpengine