ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்ற விரும்பாத சட்டத்தரணிகள்!



சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றுவதற்கு சட்டத்தரணிகள் ஆர்வம் காட்டா நிலைமை காணப்படுவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தில் சட்டத்தரணிகளுக்கான 30 பதவி வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. எனினும் இந்த 30 பதவி வெற்றிடங்களுக்கு 11 சட்டத்தரணிகளே விண்ணப்பம் செய்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க சட்டத்தரணிகளுக்கான சம்பளப் பிரச்சினை காரணமாக சட்டத்தரணிகள் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்டு பணியாற்ற ஆர்வம் காட்டவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் அரசாங்க சட்டத்தரணிகளுக்கான கொடுப்பனவுகளை தாம் உயர்த்தியதாகத் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் தற்போது 47 அரசாங்க சட்டத்தரணிகள் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலும் 40 சட்டத்தரணிகளை இணைத்துக் கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Related posts

சபாநாயகர் பதவியிலிருந்து கரு இராஜினாமா?; பொது வேட்பாளர்?

wpengine

நகைச்சுவையாக மாறிய வீரவன்சவின் அரசியல் தந்திரம்

wpengine

இளம் வீரர்களை கண்டு பயப்படும் மூத்த வீரர்கள்

wpengine