உள்நாட்டு செய்திகள்

சட்டமா அதிபர் ஜனவரியுடன் பதவியை இழக்கிறார்



இலங்கையின் அரசியல் வழக்குகள் தொடர்பில் சர்ச்சைக்குரியவராக பேசப்படும் சட்டமா அதிபர் யுவன்ரஞ்சன வணசுந்தரவின் பதவிக்காலம் அடுத்த வருடம் ஜனவரியுடன் முடிவடையுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு நெருக்கமான தரப்பு தகவல்களின்படி அவரின் பதவிக்காலம் மீண்டும் ஒருமுறை நீடிக்கப்படமாட்டாது என்றும் அவரும் சேவை நீடிப்பை கோரப்போவதில்லை என்றும் தெரியவருகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சட்டமா அதிபராக வணசுந்தர நியமிக்கப்பட்டார்.

இதன்காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் வழக்குகளை வணசுந்தர தாமதிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன

Related posts

அரசு துணிந்து முடிவுகளை எடுக்க வேண்டும்  – சம்பந்தன்

wpengine

ஒப்பந்த, பகுதிநேர அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

wpengine

சீனாவிலிருந்து மருத்துவப் பொருட்கள் இலங்கைக்கு

wpengine