உள்நாட்டு செய்திகள்

சட்டத்தை மீறினால் வழக்கு தொடர்வேன் – மஹிந்த



தேர்தல் சட்டதிட்டங்களை மீறுகின்ற அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சட்டமா அதிபரின் ஊடாக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தன்னால் முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அவ்வாறு செய்வதற்கு தனக்கு, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தேர்தல்கள் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிலையில், அரசாங்கம் சொத்துக்களை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்குவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, குமார் வெல்கம மற்றும் உதயன் கம்பன்பில, எம்.எம். முஸம்மில் ஆகியோரே இவ்வாறு முறையிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தின் சட்ட நடவடிக்கை

wpengine

ஊவா மாகாண முதலமைச்சரின் பிரேரணைக்கு முன்னாள் முதலமைச்சர் கடும் எதிர்ப்பு…

wpengine

நாடு திரும்பினார் ஜனாதிபதி

wpengine