உள்நாட்டு செய்திகள்

சஞ்சீவ கொலை தொடர்பில் இரகசிய அறிக்கை சமர்ப்பிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

விசாரணையை மேற்கொண்டு வரும் கொழும்பு குற்றப்பிரிவு, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியின் உத்தியோகபூர்வ அறையில் தொடர்புடைய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

குறித்த அறிக்கைக்கு அமைவாக, நீதிமன்றம் பொலிஸாருக்கு பல உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.

அதன்படி, பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளன.

கடந்த 19 ஆம் திகதி காலை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் வைத்து பாதாள உலகக்குழு தலைவராக கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து கொழும்பு குற்றப்பிரிவு தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Related posts

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் கைது

wpengine

வேட்பாளரினதும், கட்சிகளினதும் கொள்கைகளினதும் அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் – கூட்டமைப்பு

wpengine

ஊடக எதிர்ப்பு அரசாங்கத்துக்கு ஆரோக்கியமானதல்ல, பேசித் தீர்க்கவும்

wpengine