Top Story 1உள்நாட்டு செய்திகள்

சஜித் வேண்டும்: கண்டியில் ஆர்ப்பாட்டம்



(FASTNEWS|COLOMBO)- ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நியமிக்குமாறு கோரி கண்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்து இருந்தனர்.

இன்று காலை போகம்பர மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணி கண்டி நகர் ஊடாக பயணித்து மீண்டும் போகம்பர மைதானத்திற்கு வருகை தந்து முடிவடைந்துள்ளது.

அதிகளவான மக்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டதுடன் அவர்கள் சஜித் பிரேமதாஸ வேண்டும் என கோரி குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருந்தனர்.

Related posts

காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்…

wpengine

தேர்தல் தொடர்பில் வௌியான அதிவிசேட வர்த்தமானி

Azeem Kilabdeen

விரைவில் 25 மருந்துப் பொருட்களின் விலைகள் குறைப்பு….

wpengine