ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

சஜித் ஜனாதிபதி வேட்பாளர்?; ரணில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மக்கள் கேட்கின்ற ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும். மக்களின் விருப்பத்திற்கு மாறாக முடிவெடுத்தால் அது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக முடிவாகவே அமையும் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் பேசிய அவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆட்சேபனை எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு கட்சிக்குள் இருக்கும் ஒருசிலர் விரும்பவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

டெங்கு பரவலை கட்டுப்படுத்த ஜனாதிபதி ஆலோசனை

wpengine

விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனைகள் நிறுத்தம்..!

wpengine

2018ம் ஆண்டுக்கான நிதி ஒதிக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றில்…

wpengine