உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சஜித் கட்சியிலிருந்து 20 எம்.பிக்கள் ஐ.தே.கவுடன் இணைய தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஐக்கிய மக்கள் சக்தியின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் 
இணையவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன எனவும், 
முக்கிய பதவிகள் சகிதம் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் செல்வார்கள் எனவும் தெரியவருகின்றது.

கட்சி மாறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச செயற்படுகின்றார். அந்த கட்சியில் இருந்து ஹரின் பெர்னாண்டோ, 
மனுஷ நாணயக்கார ஆகியோர் ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளனர்.
இந்நிலையிலேயே மேலும் 20 பேர் இணைவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


Related posts

ஊடகங்கள் தொடர்பிலான தகவல் அறியும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

wpengine

பொலிஸ் அதிகாரத்தின் கீழ் பா.உறுப்பினர் நாமலை விசாரணை செய்ய உத்தரவு..

wpengine

சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியின் தலைமை வில்லியம்சனுக்கு…

wpengine