Top Story 1உள்நாட்டு செய்திகள்

சஜித்திற்கு பிரதமர் பதவி வழங்கத் தயாரென ரணில் கூறினாரா..??

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித்திற்கு பிரதமர் பதவி வழங்கத் தயார் என அதிபர் கூறியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சஜித்திற்கு பிரதமர் பதவி வழங்கத் தயார் என அதிபர் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுபான்மை கட்சிகளுடன் அதிபர் நடத்திய சந்திப்பின் போது இந்த விடயம் கூறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கத்திற்கு எந்த நேரத்திலும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என சிறுபான்மை கட்சிகள் உறுதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தனித் தனி நபர்களாகவோ தனிக் கட்சிகளாவோ அன்றி சஜித் தலைமையிலான ஒட்டுமொத்த ஐக்கிய மக்கள் சக்தியும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதே பொருத்தமானது என அதிபர் கூறியுள்ளார்.

Related posts

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு CID இல் முன்னிலையாகுமாறு உத்தரவு…

wpengine

விடுமுறையை அறிவிக்க தபாலகங்களில் அதிபர், ஆசிரியர்கள் முற்றுகை [VIDEO]

wpengine

எஸ்ட்ராசெனெகா தடுப்பூசி ஏற்றம் வழமைக்கு

wpengine