கேளிக்கை

சசிகலா வேடத்தில் சாய் பல்லவி…


விஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இயக்குனர் பிரியதர்ஷினி ஜெயலலிதா வாழ்க்கைக் கதையை, `த அயர்ன் லேடி’ என்ற பெயரில் இயக்குகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5 ஆம் திகதி வெளியானது. படப்பிடிப்பு ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அதேபோல் இயக்குநர்கள் பாரதிராஜா, ஏ.எல்.விஜய் உள்ளிட்டோரும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக இயக்கவிருக்கிறார்கள்.

இதில் விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜெயலலிதா சினிமாவில் அறிமுகமானதில் இருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆனது வரை உள்ள சம்பவங்களை மையப்படுத்தி படத்தை உருவாக்குகின்றனர். இதில் சசிகலாவாக சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related posts

ஆர்யா திருமணம் நடக்குமா? – இன்று இறுதி முடிவு….

wpengine

முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்த ரஜினிகாந்த்…

wpengine

இளமைத் தோற்றத்தில் கலக்கும் அஜித்…

wpengine