உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சங்காவுக்கு பதிலாக களத்தில் மேத்யூஸ் ஆட்டம்



நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தாக்குதல் பந்துவீச்சு மூலம் அந்த அணியை நிலைகுலைய வைக்க இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் திட்டம் தீட்டியுள்ளார்.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி இன்று டுனிடினில் ஆரம்பமாகியது.

இந்த டெஸ்ட் தொடர் பற்றி இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறுகையில், இந்த டெஸ்ட் போட்டியில் சில ஓவர்களை சிறப்பாக தாக்குதலுடன் வீச திட்டமிட்டுள்ளேன்.

இதன் மூலம் சில முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்று நம்புகிறேன். என்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்படுவேன்.

மேலும், ஹேராத் தாக்குதல் பந்துவீச்சில் எங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருப்பார். எந்த ஆடுகளத்திலும் அவர் விக்கெட்டுகளை எடுக்கும் திறமை படைத்தவர்.

துடுப்பாட்டத்தில் சந்திமால் எங்களுக்கு நம்பிக்கை அளிப்பார். எனக்கு பிறகு அவரே அதிக அனுபவம் கொண்டவராக இருக்கிறார். சங்கக்காரா 6-7 வருடங்களாக 3வது இடத்தில் ஆடி அசத்தினார்.

அதே போல் சந்திமால் 4வது இடத்தில் களமிறங்குவார். கண்டிப்பாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஷானிக்கும் கொவிட்

wpengine

இன்றும் சில பகுதிகள் முடக்கம்

wpengine

கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்

wpengine