உள்நாட்டு செய்திகள்

சகலருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அரசாங்கம் முன்னுரிமை



(FASTNEWS | COLOMBO)- கிராம எழுச்சித் திட்டத்தின் மூலம் அம்பாறை, மஹஓயா பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘சத்நிம்கம’ வீடமைப்புத் திட்டம், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் நேற்று(26) மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

அனைவருக்கும் நிழல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட 191வது வீடமைப்புத் திட்டம் இதுவாகும். குறித்த திட்டத்தில் 25 வீடுகள் உள்ளடங்குகின்றன. இதற்காக 19 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டை அண்மிக்கும் போது, சகலருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அரசாங்கம் முன்னுரிமையளிப்பதாக இதன் போது அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று

wpengine

இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி

wpengine

சர்வதேசத்தினை ஈர்த்த ரிஷாதின் கைது

wpengine