ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சகலதுறை ஆட்டக்காரர் ஷாகிப் அல் ஹஸன் மீளவும் தாயகம் திரும்பினார்…


ஆசியக் கிண்ண தொடரில் பங்கேற்றுள்ள பங்களாதேஷ் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷாகிப் அல் ஹஸன் இன்று(18) மாலை திரும்பவும் அவரது தாயகம் திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருடன் குறித்த சுற்றுப் பயணத்தில் இணைந்து கொண்ட அவரது மகளான Alayna Hasan Aubrey சுகயீனமுற்று இருப்பதால் மகள் மற்றும் அவரது மனைவியை மீண்டும் தாயகத்திற்கு அழைத்துச் செல்லவே அவர் இவ்வாறு பங்களாதேஷ் நோக்கிப் பயணித்துள்ளார்.

எவ்வாறாயினும், பங்களாதேஷ் அணியானது தற்போது ஆசியக் கிண்ண சுப்பர் 04 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் குறித்த போட்டிச் சுற்றில் பங்கேற்க ஷாகிப் அல் ஹஸன் எதிர்வரும் 19 அல்லது 20ம் திகதி மீண்டும் அணியுடன் சேரவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சமையல் எரிவாயுவின் விலை ரூ.190 இனால் உயர்வு..?

wpengine

நாகப்புற்றிலிருந்து நகலெடுக்கிறார் கோத்தபாய

wpengine

அனுபவமிக்க அரசியல்வாதிக்கே முன்னுரிமை – முரளிதரன்

wpengine