உள்நாட்டு செய்திகள்

க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின…



2016 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், அகில இலங்கை ரீதியாக முதலாவது இடத்தை கொழும்பு விசாகா மகா வித்தியாலய மாணவி அனுகி சமத்கா பெஸ்குவேல் பெற்றுள்ளார்.

இரண்டாம் இடத்தை, கண்டி மஹாமாயா பெண்கள் கல்லூரி மாணவி எஸ்.எம்.முனசிங்கவும் மூன்றாம் இடத்தை கொழும்பு, ஆனந்தா கல்லூரியின் மாணவனான ஆர்.எம்.சுகத் ரவிந்துவும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

நான்காம் இடத்தை, கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலய மாணவி எச்.பி.பவசரா மலிதி குமாரி ஹேரத்தும் ஐந்தாம் இடத்தை யாழ்ப்பாணம் ஹிந்து கல்லூரி மாணவனான ஏ.அபிநந்தனும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

பெறுபேறுகளை, www.doenets.lk/exam அல்லது www. results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து

wpengine

தற்போது 3053 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

wpengine

சந்திக ஹத்துருசிங்க பங்களாதேஷ் பயிற்சியாளர் பதவியிலிருந்து இராஜினாமா..?

wpengine