உள்நாட்டு செய்திகள்

க்ளைபோசெட்டுக்காக குறிப்பாணை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு..



நாடளாவிய ரீதியில் தடைசெய்யப்பட்டுள்ள க்ளைபோசெட் களை கொல்லியை, வரம்புக்கு உட்பட்ட நிலையின் கீழ் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கோரி, அதி விசேடமான குறிப்பாணை தொடர்பில், நேற்று(18) அமைச்சரவையில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குறிப்பாணை, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவால், கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த க்ளைபோசெட் களைக் கொல்லி பயன்பாட்டினால், சிறுநீரகக் கோளாறு மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்கள், மக்கள் மத்தியில் வெகுவாகப் பரவுதல் மற்றும் கடுமையான சுற்றுச் சூழல் பிரச்சினைகள் ஏற்படுவதன் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 2015ஆம் ஆண்டில் தடைவிதித்தார்.

க்ளைபோசெட் களைகொல்லி வரம்புக்கு உட்பட்ட நிலையின் கீழ் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குறிப்பாணையானது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமை வகிக்கும் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பிலான அமைச்சரவைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படாமல், அமைச்சரவைக்கே நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
(rizmira)

Related posts

சைட்டம் எதிர்ப்பு பாத யாத்திரையால் நகர மண்டப அருகில் கடும் வாகன நெரிசல்..

wpengine

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்களுக்கான வெற்றிடம் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி…

wpengine

ஜனாதிபதி ஊடகப்பிரிவுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

wpengine