உள்நாட்டு செய்திகள்

“கோப்” குழு இன்று மீண்டும் கூடுகிறது



பொதுமுயற்சியான்மை குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு (கோப்) வின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து கணக்காய்வாளர் நாயகம் வழங்கிய அறிக்கையை ஆராயும் நோக்கில் இன்றைய தினம் கோப் குழு கூட உள்ளதாக அதன் தலைவர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் சபாநாயகரிடம் வழங்கியுள்ள முழு இரகசிய அறிக்கையையும் கோப் குழுவிடம் வழங்குமாறு ஹந்துநெத்தி கோரியுள்ளார்.

1251 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையின் சாரம்ச அறிக்கையே கோப் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியின் ஆளுனரே நிதிச் சபையின் பிரதானி என்பதனால் புதிய ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி எதிர்வரும் 7ம் திகதி கோப்குழுவில் முன்னிலையாக நேரிடும் என சுனில் ஹந்துநெத்தி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் ஒருவர் கைது

Azeem Kilabdeen

ரக்னா லங்கா நிறுவன மோசடி விசாரணை இறுதிக் கட்டத்தில் – ஜனாதிபதி ஆணைக்குழு

wpengine

கடந்த 24 மணித்தியாலத்தில் 15 மரணங்கள்

wpengine