உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோப் குழுவின் முதலாவது கூட்டம் இன்று…



8 ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஆரம்பமான பின்னர் கோப் குழுவின் முதலாவது கூட்டம் இன்று(07) நடைபெறவுள்ளது.

அதன்படி 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட கோப் குழு இன்று பிற்பகல் கூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

8 ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு மே மாதம் 08 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு அதில் முன்னர் இருந்த கோப் குழுவே மீண்டும் நியமிக்கப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் கடந்த கோப் குழுவின் உறுப்பினராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயவிற்கு பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் புதிய குழுத்தலைவர் நியமிக்கப்படவுள்ளதாகவும், பெரும்பாலும் கடந்த குழுத்தலைவரான மக்கள் விடுதலை முன்னணியின் சுனில் ஹதுன்நெத்தியே இம்முறையும் தெரிவு செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

விமான நிலையங்கள் 22ம் திகதி முதல் வழமைக்கு

wpengine

இரத்தினபுரியில் மண்சரிவு காரணமாக 66 குடும்பங்கள் வெளியேற்றம்..

wpengine

இன்று விசேட கலந்துரையாடல்

wpengine