உள்நாட்டு செய்திகள்

கோப் குழுவின் செயற்பாடுகள் குறித்து நாடாளுமன்றில் அறிக்கை.



கோப் குழுவினர் முன்னெடுத்துள்ள மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் குறித்த இந்த அறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

கோப் குழுவால் இன்னும் பல அரச நிறுவனங்களில் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இந்த அறிக்கை அமையவுள்ளது.

மேலும், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற செயலமர்வு ஒன்றின் போதே சுனில் ஹந்துனெத்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

பேலியகொடை மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொவிட்

wpengine

பேரூந்துக் கட்டணங்கள் எதிர்வரும் ஜுலை மாதம் முதல் அதிகரிக்கும் – கெமுனு விஜேரத்ன…

wpengine

மருதமுனை பிரதேச உள்ளக வீதிகள் முன்னாள் எம்.பி ஹரீஸின் 8 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கொங்கிறீட் வீதிகளாக செப்பனிடப்பட்டது !

Azeem Kilabdeen