உள்நாட்டு செய்திகள்

கோத்தாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…



எவன்கார்ட் விவகாரம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 09 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எவன்கார்ட் மெரியட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய உள்ளிட்ட 08 பிரதிவாதிகளுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது

wpengine

நாமலின் மனைவி நாட்டை விட்டு ஓட்டம்!

wpengine

அரச மரக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சாந்த பண்டார நியமனம்…

wpengine