உள்நாட்டு செய்திகள்

கோத்தபாய தாக்கல் செய்திருந்த மனு எதிர்வரும் 22ம் திகதி விசாரணைக்கு…



எவன்காட் வழக்கிலிருந்து தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மனுவை எதிர்வரும் 22ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இன்று(13) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 06 பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் வழக்கு தொடரப்பட்டது.

எவன்காட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை பராமரித்துச் செல்வதற்காக அனுமதியளித்த காரணத்தினால் அரசாங்கத்திற்கு 1,140 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், கோத்தா உள்ளிட்ட 6 பிரிதிவாதிகளும் அடிப்படை எதிர்ப்பு மனுவொன்றை தாக்கல் செய்து இதில் பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறும் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#####

Related posts

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார நியமனம்…

wpengine

தபால் மூலமான வாக்களிப்பு முடிவுகள் தனியாக வெளியிடப்படமாட்டாது…

wpengine

72ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு இன்று..

wpengine