உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோத்தபாயவை கைதுசெய்ய ஒபாமாவிடம் கோரிக்கை



கோத்தபாயவை கைதுசெய்யக் கூறி அமெரிக்காவின் இரண்டு பிரதான அமைப்புகள் அமெரிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

Tamils for Obama மற்றும் American Tamil Forum ஆகிய அமைப்புகளே இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் யுத்தம் நடந்த சந்தர்ப்பத்தில் மனித உரிமைகள் பல மீறப்பட்டுள்ளதாகவும், பல இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை ஆகிய யுத்த குற்ற மீறல்களுக்கு பொறுப்பானவர் கோத்தபாய ராஜபக்ஷ என்றும் இவர் முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஜனாதிபதிக்கும் நெருக்கமானவர் என்றும் குறித்த அமைப்புக்களின் இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பொதுமக்களுக்கு எதிராக மேற்கொண்ட யுத்த குற்ற நடவடிக்கைகளுக்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோத்தபாயவை கைது செய்ய வேண்டும் என குறித்த தமிழ் அமைப்புக்கள் பராக் ஒபாமாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறான யுத்த குற்ற நடவடிக்கைகளுக்கு பொறுப்பான நபர் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் வரும் சந்தர்ப்பத்தை தவறவிடாமல் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை அமெரிக்கா முன்னெடுக்க வேண்டும் எனவும் குறித்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

Related posts

சந்திக ஹத்துருசிங்க முழுமையாக நீக்கம்

wpengine

தொழிநுட்பக் கோளாறு காரணமாக பிரதான பாதையிலான ரயில் போக்குவரத்து தாமதம்..

wpengine

தனிமைபடுத்தப்பட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள்

wpengine