உள்நாட்டு செய்திகள்

கோட்டை – பதுளை விசேட ரயில் சேவைகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீண்ட வாரயிறுதி விடுமுறையை முன்னிட்டு கொழும்பு, கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட ரயில் சேவைகள் நடத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை(11) வரை குறித்த இந்த விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படும்.

அதற்கமைய, கொழும்பு, கோட்டையில் இருந்து இரவு 7.35 பயணத்தை ஆரம்பிக்கும் விசேட ரயில், அதிகாலை 4.33 மணிக்கு பதுளை ரயில் நிலையத்தை சென்றடையும்.

இரவு 8 மணிக்கு பதுளையில் புறப்படும் ரயில் அதிகாலை 5.26 மணிக்கு கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய இன்று(11) புதிய விலைப்பட்டியல்…

wpengine

சபுகஸ்கந்த : விற்கப்படாது

wpengine