உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோட்டாபய வெகு விரைவில் கைது..



முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெகு விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அரசாங்க காலத்தில் மெதமுலன பிரதேசத்தில் டீ.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியகம் மற்றும் நினைவகம் அமைக்கப்பட்ட போது, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு கையகப்படுத்தி அரசாங்கத்திற்கு சுமார் 90 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கோட்டாபய ராஜபக்‌ஷவை கைது செய்வதற்கான அனுமதியை சட்ட மா அதிபரும் வழங்கியிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட சம்பந்தப்பட சில தரப்பினரிடம் இதற்கு முன்னர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

#reeshma

Related posts

பேக்கரி உற்பத்திகளது விலை தொடர்பில் சிவப்பு சமிஞை…

wpengine

நியமனப் பட்டியலை மீள் திருத்த சுகாதார அமைச்சர் இணக்கம்

wpengine

அமைச்சர் துமிந்த ‘மவ்பிம’ இடமிருந்து 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோருகிறார்..

wpengine