ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய அனைத்தும் தயார் – தாய் நாட்டிற்கான இராணுவ வீரர்கள் அமைப்பு



(FASTGOSSIP |COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய முனைப்புக்கள் இடம்பெற்று வருவதாக தாய் நாட்டிற்கான இராணுவ வீரர்கள் அமைப்பின் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் அதிகாரியினால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

கொழும்பில் இடம்பெற்ற வைபவ நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சில சிக்கலான வழக்குகள் தொடர்பில் இராணுவ வீரர்கள் சில கைது செய்யப்பட்டு அவர்களை அரச சாட்சியாளர்களாக முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக பயன்படுத்தி அவரை சிறையில் அடைக்கும் நடவடிக்கையே முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் இன்னும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் ஆட்சியில் திடீர் திருப்பங்கள் ஏற்படின் அதற்கு முன் ஆயத்தமாக இரகசிய பொலிஸ் பிரதானி அவுஸ்திரேலியா செல்வதற்கும் அனைத்து உத்தியோகபூர்வ சான்றிதழ்களும் தயார் படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாகத்தை விட்டு கணவனை கொலை செய்ய துணிந்த மனைவி!

wpengine

மஹாநாம தேர்தலில் களமிறங்குவது பொய்யானது…

wpengine

எய்ட்ஸ் விழிப்புணர்வு படமெடுக்க இருக்கிறார் பிரியதர்ஷன்

wpengine