உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோட்டாபய இராஜினாமா கடிதம் தொடர்பில் சபாநாயகர் வெளியிட்ட தகவல்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதத்தை நாளை (20) பெற்றுக்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள ​​சபாநாயகர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான எழுத்துப்பூர்வ கோரிக்கையை இதுவரை தன்னிடம் சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

எனினும் எதிர்வரும் அரசாங்க விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பாக இன்று பிற்பகல் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சில இறுதித் தீர்மானங்களை எடுப்பார் என எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

Related posts

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை கடற்படை கூட்டு பயிற்சி – 4 போர்க்கப்பல்கள் இலங்கைக்கு…

wpengine

மீண்டும் பொலிஸ் ஊரடங்குச்சட்டம்…

wpengine

இலங்கைக்கு GSP பிளஸ் வரிச்சலுகையை வழங்க தகுதி ஆய்வை மேற்கொள்ள பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு..

wpengine