உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோட்டாபயவுக்கு சலுகை வழங்கவில்லை: சிங்கப்பூர் அரசாங்கம்


(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிங்கப்பூர் அரசாங்கம், எந்த சலுகையும், விருந்தோம்பலும் அளிக்கவில்லை என்று  சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் சிங்கப்பூர் வருகை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாமின் கேள்விக்கு பாலகிருஷ்ணன் நேற்று (08) எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை வழங்கியுள்ளார்.

பொதுவாக, சிங்கப்பூர் அரசாங்கம் முன்னாள் அரச தலைவர்கள் அல்லது தலைவர்களுக்கு சலுகைகள், மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை வழங்குவதில்லை.

இதன் அடிப்படையில் இலங்கையின் முன்னாள்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் எந்தவித சலுகைகளோ, விருந்தோம்பலோ வழங்கப்படவில்லை என்று பாலகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நீர்க்கொழும்புக்கு 24 மணி நேர நீர் வெட்டு

wpengine

டீசலை 52 ரூபாவினாலும் பெற்றோலை 19 ரூபாவினாலும் அதிகரிக்க நேரிடும்! – உதய கம்மன்பில

wpengine

எவன்கார்ட் நிறுவனம் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல்..

wpengine