உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிரான நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீள் ஆராய்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்னர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை மீள ஆராய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதியின் விலக்குரிமை இல்லாததால், அந்த வழக்குகளை மீண்டும் தொடர முடியும் என்றும் அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு நாட்டை வங்குரோத்து செய்ததற்கு கோட்டபாய ராஜபக்சவும் ஏனைய குடும்ப உறுப்பினர்களும் முக்கியப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் பிரகாரம் தண்டிக்கப்பட வேண்டுமென முன்னாள் பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts

இதுவரை 426 கடற்படையினர் குணமடைந்தனர்

wpengine

முறையான திட்டத்தை வகுக்குமாறு அரசிடம் ரணில் கோரிக்கை

wpengine

ரங்கன ஹேரத்தினது தலைமைப் பதவி குறித்து மஹேலவிடமிருந்து ‘நச்’ன்னு பதில்..

wpengine