Top Story 1உலக செய்திகள்

கொவிட் -19 : பலி எண்ணிக்கை 1770 ஆக அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கொவிட் -19 வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1770 ஐ தாண்டியுள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுஹானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொவிட் -19 வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 27 நாடுகளுக்கும் மேல் இந்த வைரஸ் பரவி உள்ளதால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொவிட் -19 வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொவிட் -19 வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் வுஹானில் இந்த வைரஸ் பாதிப்பால் வைத்தியசாலைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

சீனா முழுவதும் சுமார் 71,223 மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகின்றது.

Related posts

எகிப்திய ஜனாதிபதிக்கு 3 மைல் தூரம் சிவப்பு கம்பள வரவேற்பு – சர்ச்சை வெடித்தது

wpengine

பதற்றம் தணியாத நிலையில் ஜம்மு காஷ்மீரில் தேர்தல்

wpengine

துபாய் நோக்கி 130 பயணிகளுடன் பயணித்த இந்திய விமானம் விபத்து…

wpengine