உலக செய்திகள்

கொவிட்-19 : சிங்கப்பூரில் 77 பேர் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | சிங்கப்பூர் ) – கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

அந்நாட்டு பாராளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் இந்த நிலையை கையாள முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 77 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 80 சதவீதமானோருக்கு சிறிய நோய் அறிகுறிகளே தென்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை இரத்து செய்ய கோரிக்கை

wpengine

அமெரிக்க VIP ட்விட்டர் கணக்குகள் முடக்கம்

wpengine

கொரோனா வைரஸ் – பலியானோர் எண்ணிக்கை 900 ஆக அதிகரிப்பு

wpengine