Coronavirus OutbreakTop Story 3உலக செய்திகள்

கொவிட் – 19 : உலகம் முழுவதும் இதுவரை 663,740 பேர் பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | ஸ்விட்சர்லாந்து) – கொவிட் – 19 எனும் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

உலகின் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை 663,740 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 30,879 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 4 லட்சத்து 90 ஆயிரத்து 678 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 25 ஆயிரத்து 207 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 142,183 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர். 

Related posts

மக்கள் எதிர்பார்த்த மறுமலர்ச்சி இதுதானா?

Azeem Kilabdeen

துருக்கி நீதிமன்ற கட்டிடத்தில் குண்டுத்தாக்குதல்..

wpengine

மும்பையில் கடும் மழை நீடிப்பு- போக்குவரத்து பாதிப்பு…

wpengine