உலக செய்திகள்

கொவிட் 19க்கு மத்தியில் தென்கொரியாவில் தேர்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் இருந்து வரும் சூழலில், தென் கொரியாவில் பலத்த பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளோடு பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வாக்களிக்க காத்திருக்கும் வாக்காளர்களுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி வேண்டும், வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வாக்களிக்க வருபவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே, அவர்கள் வாக்குசாவடிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தென் கொரியாவில் பாராளுமன்றத் தேர்தல் ஒருபோதும் தள்ளிவைக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வட கொரியாவுடன் முக்கிய ஒப்பந்தத்தில் கைச்சாத்து…

wpengine

வர்தா புயல் – சீற்றத்துடன் கொந்தளிக்கும் கடல் (VIDEO)

wpengine

அதிவேக ரயில் – பேருந்து கோர விபத்தில் 30 பேர் பலி

wpengine