உள்நாட்டு செய்திகள்

கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் நாளை நீர் விநியோகம் தடை



கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் நாளை (23) சனிக்கிழமை நண்பகல் 12.00 முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 12 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் அத்தியவசிய திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதால் குறித்த நேரப் பகுதியில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் கோட்டே மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள், பத்தரமுல்லை, கொஸ்வத்த, கலபலுவாவ, தலவத்துகொட, ஜயவடனகம, மாலபே, ஹோகந்தர, மஹரகம, பொரலஸ்கம நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள் ஆகிய இடங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

இது தவிர கொழும்பு 06 மற்றும் கொழும்பு 08 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

பால்மா தட்டுப்பாடு : அரசிடம் தீர்வில்லை

wpengine

கலகொட அத்தே தேரரின் மேன்முறையீடு 31ம் திகதிக்கு…

wpengine

இன்றைய வானிலை

wpengine