உள்நாட்டு செய்திகள்

கொழும்பு வீதி இன்று(26) முதல் 29 வரையில் மூடப்படும்..



கே.சிறில்.சி பெரேரா மாவத்தை, 06ம் ஒழுங்கை சந்தியிலிருந்து சுகததாச விளையாட்டரங்கின் மெடிபார்க் சந்தி வரையிலான பாதை இன்று(26) இரவு 09.00 மணி முதல் எதிர்வரும் 29ம் திகதி காலை 05.00 மணி வரையிலான காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த வீதியில் நீர்க்குழாய் பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் இவ்வாறு குறித்த வீதிகள் மூடப்படவுள்ளது.

ஆதலால், குறித்த வீதியினூடாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

#rishma

Related posts

“கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டம் புத்தாண்டில் ஆரம்பம்

Azeem Kilabdeen

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கம்

wpengine

சதுரவின் கருத்து அரசின் நிலைப்பாடல்ல – விஜயதாச சாடல்

wpengine