உள்நாட்டு செய்திகள்

கொழும்பு விமானநிலையத்தில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திய 8 இந்தியர்கள் கைது



கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 12 மணி அளவில் சென்னைக்கு புறப்பட தயாராக இருந்த இலங்கை விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளிடம் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

அப்போது இந்தியாவை சேர்ந்த 8 பேர் மறைத்து வைத்திருந்த 1.2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  இதில் 7 பேர் தங்களது  உடமைகளில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தனர். ஒருவர் தனது இடுப்பில் கட்டிய பெல்ட்டில் 57 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.21 லட்சம் ஆகும்.

Related posts

கடமைக்கு இடையூறு விளைவித்தவர் கைது

wpengine

பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

wpengine

ஷாகிப் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோருக்கு ஐசிசி அபராதத் தொகை விதிப்பு…

wpengine