உள்நாட்டு செய்திகள்

கொழும்பு மற்றும் தூத்துக்குடிக்கு இடையில் கப்பல் சேவை..



கொழும்பு மற்றும் தூத்துக்குடிக்கும் இடையில் கப்பல் சேவை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்திய இலங்கை பயணிகளுக்கிடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதன் மூலம் இரண்டு நாட்டு மக்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்துவதற்கும், கலாச்சார பொருளாதார தொடர்புகளை மேம்படுத்துதற்கும் வர்த்தக சுற்றுலா மற்றும் புதிய தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் .

இதனை தொடர்ந்து கொழும்பு மற்றும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கான திட்டத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட கேள்வி மனுவிற்கான (EOI) விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும் இது தொடர்பில் உரிய பெறுபேறு கிடைக்கவில்லை எனினும் இந்த திட்டத்திற்கு தற்பொழுது இடம்பெற்றுவரும் கேள்வி மனு நடவடிக்கைகளை இரத்து செய்வதற்கும் புதிதாக கேள்வி மனு விண்ணப்பத்தை கோருவதற்கும் பொருத்தமான ஒருவரை தெரிவுசெய்தவற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

Azeem Kilabdeen

மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்…

wpengine

சீரற்ற வானிலை – 15 மாவட்டங்கள் பாதிப்பு

Azeem Kilabdeen