உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – பௌத்தலோக்க மாவத்தையில் ஒரு வழி பாதைக்கு பூட்டு



(FASTNEWS|COLOMBO) – பௌத்தலோக்க மாவத்தை, ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தை சந்தியிலிருந்து தும்முல்ல சுற்றுவட்ட பகுதிகளில் வரையான ஒரு ஒழுங்கை இன்று(26) முதல் ஒக்டோபர் 25 வரை மூடப்படவுள்ளது.

கொழும்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள பாதை அகழ்வு நடவடிக்கையின் காரணமாக, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து வெளிச் செல்லும் ஒழுங்கையின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான மாற்று வழியாக, தும்முல்ல சுற்றுவட்டத்தின் வழியாக பௌத்தாலோக மாவத்தைக்கு பிரவேசிக்கும் வாகனங்கள், தேர்ஸ்டன் வீதி வழியாக நந்தா மோட்டர்ஸ் ஊடாக சுதந்திர சுற்றுவட்டம் வழியாக பிலிப் குணவர்தன மாவத்தை, ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தை ஊடாக பௌத்தாலோக்க மாவத்தைக்கு நுழைய முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாதை வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த நைஜீரிய பிரஜை கைது

wpengine

ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் சுரக்ஷா காப்புறுதி தற்காலிகமாக நிறுத்தம்…

wpengine

இன்று ஸ்டோபெரி சந்திர கிரகணம

wpengine