உள்நாட்டு செய்திகள்

கொழும்பு தேர்ஷ்டன் கல்லூரி அதிபரின் இடமாற்றத்தை எதிர்த்து பாரிய ஆர்ப்பாட்டம்



கொழும்பு தேர்ஷ்டன் கல்லூரியின் அதிபரை கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபராக இடமாற்றம் செய்தமையை எதிர்த்து பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கடந்த 9 வருடங்களில் தேர்ஷ்டன் கல்லூரியின் அதிபர்களாக நியமனம் பெற்று வந்த 6 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று முற்பகல் தேர்ஷ்டன் கல்லூரிக்கு எதிரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

சுற்று நிருப ஆலோசனைகளை மீறிய சம்பவம் தொடர்பில் றோயல் கல்லூரியின் அதிபராக பணியாற்றிய உபாலி குணசேகர கல்வியமைச்சு இடமாற்றம் செய்யப்பட்டதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேற்று தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய வரித்திட்டம் தொடர்பில் கூட்டு எதிர்கட்சி வேலைத்திட்டம்..

wpengine

தப்பிச்சென்ற கைதிகள் குறித்து விசாரணை…

wpengine

கொரோனாவிலிருந்து 18 பேர் குணமடைந்தனர்

wpengine