உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – கொட்டஹேன பிரதேச வீதிகள் சிலவற்றுக்கு போக்குவரத்து மட்டு…


இன்று(21) இரவு 09 மணி முதல் 24ம் திகதி வரையில் காலை 05 மணி வரை கொழும்பு – கொட்டஹேன கே.சிறில் பெரேரா மாவத்தை அண்டிய சந்தி முதல் வோல்ஸ் லேன் பாதையூடான சந்தி உள்ளிட்ட பிரதேசங்களுக்கு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நீர்க் குழாய் திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆதலால், சாரதிகள் மாற்று வீதிகளாக ஜோஜ் ஆர்.டி.சில்வா மாவத்தை ஊடாக நுழையும் வாகனங்கள் வாசல சந்தி ஊடாக இடது பக்கமாக பீல்ட் வீதியினூடாக அழுத் மாவத்தை ஊடாக மோதர மட்டக்குளிய திசைக்கு பயணிக்கலாம் என்றும் வலப்பக்கமாக வோல்ஸ் சந்தியினூடாக குறித்த வீதியில் சென்று அழுத் மாவத்தை ஊடாக பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டில் இதுவரையில் 2007 தொற்றாளர்கள் பதிவு

wpengine

ராஜிதவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

wpengine

புதிய வீதி ஒழுங்கை சட்டத்தை கடைப்பிடிக்க இன்று முதல் கால அவகாசம்

wpengine