உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொழும்பு ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக விசேட அதிரடிப்படையினர் களத்தில்..



கொழும்பில் உள்ள ஐ.நா.சபையின் அலுவலகத்துக்கு முன்பாக கடும், பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அங்கு மேலதிக பாதுகாப்புக்காக, விசேட அதிரடிப்படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு, புதன்கிழமை இரவு இலங்கையை வந்தடைந்தார்.

அவருடைய வருகையை எதிர்த்தும், சர்வதேச விசாரணைக்கான அதிகாரங்களை பிரயோகிக்க வேண்டாமென வலியுறுத்தியும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.

இதேவேளை, போரினால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்களுக்கு நீதிக்கோரி ஐக்கிய சமாதான முன்னணி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.

இந்நிலையில், அவரது வருகையையொட்டி கொழும்பில் உள்ள பிரதான வீதிகளில் ஐ.நா கொடியும், தேசியக் கொடியும் பறக்கவிடப்பட்டுள்ளன.

Related posts

நாளை 61 ஆவது வருடப் பூர்த்தியை கொண்டாடும் மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்லம்..!

wpengine

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான நாடாளுமன்ற விவாதம் அடுத்த வாரம்..

wpengine

69 வயதுடைய பிக்கு, 46 வயது ஆண் மீது பாலியல் துஷ்பிரயோகம் – விகாரை குளத்தை பார்வையிடச் சென்றபோது அசிங்கம்..!

wpengine