உள்நாட்டு செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு…



கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று(09) 18 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று(09) இரவு 09.00 மணி முதல் நாளை(10) பிற்பகல் 03.00 மணி வரை
கொழும்பு 01, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

புறக்கோட்டை பிரதேசத்தில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக அந்த சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, வீதி அபிவிருத்தி பணி காரணமாக சில பிரதேசங்களுக்கு நாளை(10) அதிகாலை 04.00 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மொரகஸ்முல்ல, ராஜகிரிய, எதுல்கோட்டே, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரியிலிருந்து திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதிகள் மற்றும் உள்வீதிகள் ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 -100 மி.மீ அளவான மழைவீழ்ச்சி

wpengine

தேர்தல் கண்காணிப்புகள் அல்லது முறைப்பாடுகளை முன்வைக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்..

wpengine

இலங்கை வந்தடைந்த 16,000 மெட்ரிக் தொன் யூரியா உரம்..!

wpengine