உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் 18 மணித்தியாலம் நீர் வெட்டு அமுலுக்கு…



கொழும்பு 01,13,14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில் எதிர்வரும் சனிக்கிழமை(09) நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை(09) இரவு 09 மணி முதல் ஞாயிறு பிற்பகல் 03 மணி வரை 18 மணித்தியாலம் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

மேலும், புறக்கோட்டை பிரதேசத்தில் குறைந்த அழுத்தத்தில் நீர் வழங்கப்படும் எனவும் குறித்த சபை தெரிவித்துள்ளது.

கொழும்பின் கழிவு நீர் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த அத்தியாவசிய
திருத்தப்பணிகள் இடம்பெறவுள்ளமை காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

Related posts

வாக்குப் பெட்டிகளை கொண்டுசெல்ல 1100 பேருந்துகள்

wpengine

மஹிந்தவினால் மூடிமறைக்கப்பட்ட அறிக்கைகளை மைத்திரி வெளியிடத் தீர்மானம்

wpengine

வெவ்வேறான மூன்று செய்தியாளர் சந்திப்பிலும் கேள்விகளுக்கு நழுவிச்சென்ற அமைச்சர்கள்.. [VIDEO]

wpengine