உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் 15 மணி நேர நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் நாளை(14) காலை 9 மணி முதல் 15 மணித்தியால நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ், நீர்க்குழாய் திட்டத்தை விரிவாக்கும் நடவடிக்கைகளினால் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு 2, 3, 7, 8 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதுடன், காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையான குறித்த காலப்பகுதிக்குள் கொழும்பு 1-இல் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

ஈரானிடம் இருந்து பெறப்படும் எண்ணெய்க்கு பதிலாக இலங்கை தேயிலை வழங்க ஒப்பந்தம்..!

wpengine

நாமல் குமாரவின் அழிக்கப்பட்ட குரல் பதிவுகளின் அறிக்கை நீதிமன்றில்…

wpengine

ஹஜ் கடமைக்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடல்

wpengine