வணிகம்

கொழும்பில் 100 Wi-Fi வலயங்கள் ஆரம்பிக்கத் திட்டம்…



பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைவாக இலவச Wi-Fi சேவையை நாடுமுழுவதிலும் விரிவுபடுத்தும் ஒரு கட்ட வேலைத்திட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு மாநகரசபையின் தலைமையில் இதன் முதற்கட்ட நடவடிக்கையாக 20 Wi-Fi வலயங்களை ஆரம்பிப்பதற்கு தற்பொழுது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது 10க்கும் மேற்பட்ட Wi-Fi வலயங்கள் செயற்பட்டு வருகின்றன.

இதேவேளை, கொழும்பு நகரத்தை உள்ளடக்கிய வகையில் 100 Wi-Fi வலயம் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, பொது Wi-Fi வலயங்களை கவரும் வகையில் Wi-Fi வசதிகளுக்கு மேலதிகமாக கையடக்க தொலைபேசிக்கான வசதிகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கான வசதிகள் தொடர்பான தகவல்களையும் இந்த இயந்திரத்தின் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“வரலாற்றில் முதல் தடவையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை மீது புதிய கொள்கை அறிமுகம்” – அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!

wpengine

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கருங்கல் அகழ்வு அமைய வேண்டும்

wpengine

கடந்த வருடத்தில் வாகனப் பதிவில் வீழ்ச்சி…

wpengine