சூடான செய்திகள்

கொழும்பில் மருத்துவபீட மாணவர் பேரணி மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்,நீர்த்தாரை வீச்சு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பில் இன்று அரசுக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவபீட மாணவர்கள், உலக வர்த்தக ​மைய வீதித் தடையை உடைத்துக் கொண்டு முன்னேற முற்பட்டபோது, மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டனர்.
கொழும்பு விகாரமாதேவி பூங்கா, மருதானை வழியாக டெக்னிக்கல் சந்தியை அடைந்த மாணவர்கள், கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக கோட்டையை நோக்கிச் சென்றனர். அங்கிருந்து காலிமுகத்திடல் போராட்ட களத்துக்கு செல்ல முற்பட்ட போது, போலீசார் வீதித் தடைகளை ஏற்படுத்தி தடுத்தனர்.
அதனை உடைத்துக் கொண்டு முன்னேற முற்பட்ட வேளையிலேயே கண்ணீர்ப்புகை பிரயோகம்,நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

அல்ஷிபா மருத்துவமனை இஸ்ரேல் தரைப்படையால் சுற்றிவளைப்பு..!

wpengine

சுகாதார அமைச்சின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்..

wpengine

ஜனாதிபதியின் கலந்துரையாடலை புறக்கணித்த பொஹட்டுவ உறுப்பினர்கள்..!

wpengine