உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18, 075 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 401 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொரோனா தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 201 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை ஆகியவற்றுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 14,564 ஆக காணப்படுகின்றது.

மேலும் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதுடன் 5799 பேர் வைத்தியிசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

No description available.

Related posts

ஜின்னா புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரல்

wpengine

தேர்தல் பணிகளுக்காக சென்ற 50 மேற்பட்டோருக்கு ஒவ்வாமை

wpengine

ஐக்கிய மக்கள் சக்தி இன்று விசேட கலந்துரையாடல்

wpengine